×

ஈட்டி எறிதலில் தங்கம் தேசிய கீதம் முழங்க பதக்கம் பெற்றது சிறந்த தருணம்: இந்திய வீரர் சுமித் உருக்கம்

டோக்கியோ: பாராஒலிம்பிக் போட்டியின் ஈட்டி எறிதல் பிரிவில் இந்தியாவின் சுமித் அன்டில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். அவர் அளித்த உருக்கமான பேட்டியில் கூறியிருப்பதாவது:-நான் வெற்றிபெற்று தங்கப்பதக்கத்தை கையில் வாங்கியதும், அந்த உணர்வை வார்த்தைகளால்  எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியவில்லை. மிக மிக சிறப்பு வாய்ந்த ஓர் உணர்வு. முதலில் என் சாதனையை நான் உடைக்க வேண்டும் என்றே கருதினேன். முதல் த்ரோ 66.95மீ, அடுத்து 70மீ மைல்கல்லை கடக்க கவனம் செலுத்தினேன். கொரோனாவினால் கடந்த 2 ஆண்டுகள் கடினமாக இருந்தது. 2020 லாக்டவுன் போது நான் என் கிராம வயல்களில் பயிற்சி செய்தேன். புதிய சாலை அமைத்துக் கொண்டிருந்தார்கள் அதில் மண் இருந்தது. இங்கு 3 மாதங்கள் பயிற்சி எடுத்தேன். பிறகு ஸ்போர்ட்ஸ் அதாரிட்டி ஆஃப் இந்தியா என்னை அழைத்தார்கள். ஆனால் கிராமத்தில் மேற்கொண்ட தீவிர பயிற்சிதான் எனக்கு தன்னம்பிக்கையை அளித்தது. செயற்கைத் தரையில்தான் பயிற்சி செய்து பழக்கம், புல்தரையில் என் கால்களுக்கு அதிகம் சிரமம் ஏற்பட்டது. ஆனால் நான் விடவில்லை, சிறு தவறுகளையும் திருத்திக் கொண்டேன். சரியாகும் வரை நிறைய முயற்சிகள் செய்தேன். நான் பல உலக சாதனைகளை முறியடித்திருக்கிறேன். இருப்பினும் இந்தத் தருணம் மிக சிறப்பு வாய்ந்த தருணம். ஏனெனில் இந்தியக் கொடியுடன் தேசிய கீதம் முழங்க பதக்க மேடையில் நிற்பது என் வாழ்க்கையில் முதல் முறை. என் குடும்பத்தாருடன் வீடியோ காலில் பேசினேன். அப்போது என் தாயாரின் கண்களில் தெரிந்த பெருமை சிறப்பு வாய்ந்தது. 2016-ல் நீரஜ் சோப்ராவைப் பார்த்த பிறகுதான் ஜாவ்லின் த்ரோ என்ற ஒரு விளையாட்டு இருப்பதையே அறிந்தேன். அதிலிருந்து ஈட்டி எறிதலில் கடின உழைப்பை போட்டேன். இந்தியாவில் இது குறித்த அறிதலும் அவ்வளவாக இல்லை. ஈட்டி எறிதலில் இந்தியாவிலிருந்து உலக சாம்பியன்களை உருவாக்க முடியும். எனவே இது குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டால் இன்னும் பல சாம்பியன்கள் உருவாவது உறுதி.இவ்வாறு அவர் கூறினார்….

The post ஈட்டி எறிதலில் தங்கம் தேசிய கீதம் முழங்க பதக்கம் பெற்றது சிறந்த தருணம்: இந்திய வீரர் சுமித் உருக்கம் appeared first on Dinakaran.

Tags : India ,Sumit Urukkam ,TOKYO ,Sumit Andil ,Paralympic Games ,Javelin ,Dinakaran ,
× RELATED மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு...